திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்!
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் பிரபாஸ். ஆனபோதிலும் அதன்பிறகு அவர் நடித்த சாஹோ, ராதேஷ்யாம் போன்ற சில படங்கள் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தன. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்திருக்கும் ஆதிபுருஷ் படம் வருகிற ஜூன் 16ம் தேதி திரைக்கு வரவுள்ளது. ராமாயண கதையில் உருவாகி உள்ள இந்த படத்தில் அவர் ராமராக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் 600 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், இன்று மாலை ஆதிபுருஷ் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் பிரபாஸ். இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.