நெல்லையில் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இளைஞர் ஒருவரை வெட்டிக் கொன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் உள்ள கல்லறை தோட்டத்தில் நேற்று இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த கொலை குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் நெல்லை கே டி சி நகரைச் சேர்ந்த ஜோஸ் செல்வராஜ் என்பதும், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துஹரி என்பவரை கொலை செய்த வழக்கின் முக்கிய குற்றவாளி அவர் என்பதும் தெரியவந்தது.
அந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பின் மது அருந்துவதற்காக கல்லறை தோட்டத்திற்கு வந்த ஜோஸ் செல்வராஜை பழி வாங்கும் நோக்கில் எதிர்தரப்பினர் மடக்கிக் கொலை செய்தததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக முத்துஹரியின் அண்ணன் சந்தோஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.