அரபிக் கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயலால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிபர்ஜாய் புயல்அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெற்றுள்ளது. பிபர்ஜாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மிக தீவிர புயல்இந்நிலையில் மேற்கு-தென்மேற்கில் மையம் கொண்டுள்ள பிபர்ஜாய் புயல் வடக்கில் நகர்ந்து மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இந்த புயல் கோவாவுக்கு 860 கிலோ மீட்டர் மேற்கு தென்மேற்கில் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில் தமிழகத்திலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மழைஇதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள முன்னறிவிப்பில் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் 12 வரைமேலும் வட கிழக்கு மாநிலங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரள ஆகிய மாநிலங்களில் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையைம் எச்சரித்துள்ளது. மேலும் பிபர்ஜாய் புயலால் மும்பையில் ஜூன் 12 ஆம் தேதி வரை கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
அரபிக் கடலில் முதல் புயல்இந்த பிபர்ஜாய் புயல் தீவிர புயலாக மாறி அடுத்த மூன்று நாட்களில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும் எனறும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் அரபிக்கடலில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. பிபர்ஜாய் புயல்தான் இந்த ஆண்டில் அரபிக் கடலில் உருவாகும் முதல் புயல் என்பது குறிப்பிடத்தக்கது.