பாரீஸ்
நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் அரினா சபலெங்கா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பாவ்லி சென்கோவாவை தோற்கடித்து அரை இறுதியில் கால் பதித்தார்.
Related Tags :