மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் நள்ளிரவில் தடம் புரண்டன.
ஷாபுரா பிடோனியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கிடங்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சரக்கு ரயிலில் இருந்து எரிவாயுவை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்தபோது ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன.
உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும், ரயில் சேவையும் பாதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.