மும்பையில் விரார் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
மேலும் சிலர் காயம் அடைந்தனர். உயிரிழந்த பெண்களின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த மூன்று பெண்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது.