சைக்கிளில் மீன் விற்று கஷ்ட்டப்பட்டு தன்னை படிக்க வைத்த தந்தைக்கு மீன் வியாபாரம் செய்ய மகன் சொகுசு கார் பரிசளித்த சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகின்றது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சுந்தன் வயலைச் சேர்ந்த சிவானந்தம் – காளியம்மாள் என்ற தம்பதிக்கு சுரேஷ் கண்ணன் எனும் மகன் மற்றும் இரு மகள்கள் இருக்கின்றனர் . சிவானந்தம் கண்மாயில் மீன்பிடி தொழில் செய்து மிகவும் சிரமப்பட்டு தமது மகனை ஒரு மெரைன் இன்ஜினியராக்கினார்.
மாதம் 2 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் அவர் தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு குடும்பத்தை பொறுப்புடன் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் சுரேஷ் கண்ணன், தந்தை சிவானந்தனுக்கு மீன்பிடி தொழில் செய்ய ரூ.15 லட்சம் மதிப்பு கொண்ட ஒரு காரை பரிசாக கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த எர்டிகா சொகுசு காரில், தந்தை சிவானந்தன் மீன்களை எடுத்துக்கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகின்றார். சைக்கிளில் மீன் விற்று கஷ்ட்டப்பட்டு தன்னை படிக்க வைத்த தந்தைக்கு மீன் வியாபாரம் செய்ய மகன் சொகுசு கார் பரிசளித்த சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகின்றது.