விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதி மறுத்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக இரு தரப்பினரும் கோயிலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார்.
அறநிலை துறைக்கு சொந்தமான இந்த கோயிலில் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதை அடுத்து மேல் பாதி கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவுவதால் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.