அமெரிக்காவில் உயிரியல் பூங்கா ஒன்றில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் பராமரிக்கப்பட்டுவந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி 10-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது.
தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை பார்த்தீனோஜெனிசிஸ் அல்லது “கன்னி பிறப்பு” என்று அழைக்கப்படுகிறது. ராஜ நாகம், வேளா மீன், கலிஃபோர்னியா காண்டோர் கழுகுகள் போன்றவற்றில் பார்த்தீனோஜெனிசிஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தாலும், முதலை இனங்களில் முதல் கன்னி பிறப்பு இதுதான் என பயாலஜி லெட்டர்ஸ் இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப்பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், அதன் மூலமே கன்னிப் பிறப்பு நிகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.