சென்னை: அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ளது விடாமுயற்சி.
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் அப்டேட் அஜித் பிறந்தநாளில் வெளியானது.
ஆனாலும், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில், தினமும் டிவிட்டரில் ட்ரெண்டாகும் விடாமுயற்சி ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தினமும் ட்ரெண்டாகும் விடாமுயற்சி ஹேஷ்டேக்:அஜித்தின் 62வது படமாக உருவாகும் விடாமுயற்சியை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படம் குறித்து அஜித்தின் பிறந்தநாள் தினத்தில் அபிஸியல் அப்டேட் வெளியானது. இதனால், விரைவில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இதுவரை விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கவே இல்லை.
விடாமுயற்சி அப்டேட் வெளியானது போது பைக் ட்ரிப்பில் பிஸியாக இருந்தார் அஜித். நேபாளம், பூடான் நாடுகளுக்கு பைக் சென்றிருந்த அஜித், கடந்த மாதமே சென்னை திரும்பினார். விடாமுயற்சி படப்பிடிப்புக்காக தான் அஜித் சென்னை திரும்பியதாக சொல்லப்பட்ட நிலையில், வந்த வேகத்தில் கேரளா பக்கம் ட்ரிப் சென்றார். இதனால், இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கவில்லை.
அதேநேரம் ஜூன் முதல் வாரம் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்காக புனேவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளதாகவும், முதலில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின்னர் அஜித், மகிழ் திருமேனி இருவருமே லண்டனில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இறுதிக்கட்ட ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என சரியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. புனே அல்லது லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து நாளுக்கு ஒரு அப்டேட் வெளியாகி வருவதால் ‘விடாமுயற்சி’ என்ற ஹேஷ்டேக் தினமும் ட்ரெண்டாகி வருகிறது. இதனால், விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கிவிட்டதோ என நினைத்து ரசிகர்கள் ஏமாந்து வருகின்றனர்.
இதனையடுத்து விடாமுயற்சி ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். விடாமுயற்சி படம் தினமும் ட்ரெண்டிங் ஆனாலும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை என கலாய்த்து வருகின்றனர். மேலும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் முன் விஜய்யின் லியோ படமே ரிலீஸாகிவிடுமோ என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் நொந்துபோய் உள்ளனர்.