புதுடில்லி: புதுடில்லியின் ஜோகா பாய் எக்ஸ்டென்சன் பகுதியில், உள்ள கட்டடம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருபவரின் 8 மற்றும் 7 வயது மதிக்கத்தக்க குழந்தைகள் நேற்று மாலை முதல் காணவில்லை. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர். கடைசியாக குழந்தைகள் இருவரும் பெற்றோருடன் இணைந்து உணவருந்திய பின்னர் மாயமாகினர்.
இந்நிலையில், இரு குழந்தைகளும், அதே கட்டடத்தின் ஒரு பகுதியில் இருந்த மரப்பெட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர். உடலில் காயம் ஏதும் இல்லை. இதனால், மரப்பெட்டியில் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement