Honda 125cc Bikes on-road Price Tamil Nadu and Engine Specs – ஹோண்டா 125cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்தியாவின் 125cc சந்தையில் முன்னணி ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் 125 மற்றும் SP125 என இரண்டு பைக்குகளின் என்ஜின், சிறப்புகள், மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

125cc சந்தையில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் சூப்பர் ஸ்பிளெண்டர், கிளாமர் 125, பஜாஜ் ஆட்டோ பல்சர் 125, பல்சர் என்எஸ் 125 மற்றும் CT 125X, டிவிஎஸ் மோட்டார் ரைடர் 125 ஆகிய மாடல்களுடன் நேரடியாக சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.

2023 Honda SP125

ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்பினை கொண்டுள்ள ஹோண்டா எஸ்பி 125 பைக்கிற்கு சவாலாக டிவிஎஸ் ரைடர், கிளாமர் 125 பல்சர் 125 பைக்குகள் உள்ளன. சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் ACG வசதியை பெற்றுள்ள SP125 பைக்கில் 123.94cc eSP என்ஜின் பொருத்தப்பட்டு 10.72 hp பவரை 7500 rpm-லும் மற்றும் 10.9 Nm டார்க் 6000 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

2023 ஹோண்டா SP125 பைக்கின் மைலேஜ் சராசரியாக 60Kmpl கிடைக்கின்றது.

honda sp125 bike

முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டுள்ள பைக்கில் எரிபொருள் இருப்பு, சைட் ஸ்டான்டு இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், ஈகோ இன்டிகேட்டர் அம்சங்களுடன் கிடைக்கின்றது.

2023 ஹோண்டா SP125 பைக்கில் இருபக்க டயர்களிலும் 130mm டிரம் பிரேக் அல்லது முன்புறத்தில் 240 mm டிஸ்க் என இருவிதமான பிரேக்கிங் ஆப்ஷனுடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் பெற்று 116 கிலோ எடை கொண்டுள்ள பைக்கின் முன்புற டயர் 80/100-18 M/C 47P மற்றும் பின்புற டயர் 100/80-18 M/C 53P என ட்யூப்லெஸ் ஆக உள்ளது.

டைமன்ட் வகை சேஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள SP125 பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2020 mm , அகலம் 785 mm மற்றும் உயரம் 1103 mm ஆகவும் வீல்பேஸ் 1285 mm , இருக்கை உயரம் 790 mm இறுதியாக கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 mm ஆக உள்ளது.

எல்இடி டிசி ஹெட்லேம்ப் உடன் 11.2 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்க் பெற்ற எஸ்பி 125 மாடலில் இம்பீரியல் ரெட் மெட்டாலிக், கருப்பு, மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், ஷைரன் ப்ளூ மற்றும் மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் என 5 நிறங்கள் கிடைக்கின்றது.

2023 ஹோண்டா எஸ்பி125 பைக்கின் விலை SP125 DRUM- Rs.87,943 மற்றும் SP125 DISC- Rs.91,943 (எக்ஸ்ஷோரூம்)

sp125 bike price

   Honda SP 125
Engine Displacement (CC) 123.94 cc Air-cooled
Power 10.72 hp @ 7500 rpm
Torque 10.9 Nm @ 6000 rpm
Gear Box 5 Speed

2023 ஹோண்டா SP125 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை

SP125 DRUM- ₹.1,04,500

SP125 DISC- ₹. 1,08,200

2023 Honda Shine 125

அடுத்து, ஹோண்டாவின் பட்ஜெட் விலை 125cc பைக் மாடலாக  விளங்கும் ஷைன் 125 பைக்கில் எஸ்பி125 மாடலில் உள்ள என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 123.94cc eSP என்ஜின் பொருத்தப்பட்டு 10.59 hp பவரை 7500 rpm-லும் மற்றும் 11 Nm டார்க் 6000 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

honda shine 125

2023 ஹோண்டா ஷைன் 125 மாடலின் இருபக்க டயர்களிலும் 130mm டிரம் பிரேக் அல்லது முன்புறத்தில் 240 mm டிஸ்க் என இருவிதமான பிரேக்கிங் ஆப்ஷனுடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

சாதாரண ஹாலெஜன் ஹெட்லேம்ப் பெற்று முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் பெற்று 114 கிலோ எடை கொண்டுள்ள பைக்கின் முன்புற டயர் 80/100-18 M/C 47P மற்றும் பின்புற டயர் 80/100-18 M/C 54P என ட்யூப்லெஸ் ஆக உள்ளது.

அனலாக் முறையிலான கிளஸ்ட்டர் கொண்டுள்ள பைக்கில் எரிபொருள் இருப்பு, சைட் ஸ்டான்டு இன்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. ஹோண்டா ஷைன 125 பைக்கில் கருப்பு, கிரே மெட்டாலிக், ப்ளூ மெட்டாலிக், ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே என 5 நிறங்கள் உள்ளன.

ஹோண்டா ஷைன் 125 பைக்கிற்கு போட்டியாக சூப்பர் ஸ்பிளெண்டர் , பல்சர் 125, சிடி 125X போன்ற மாடல்கள் உள்ளன. 2023 ஹோண்டா ஷைன் 125 பைக்கின் மைலேஜ் சராசரியாக 60Kmpl கிடைக்கின்றது.

டைமன்ட் வகை சேஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஷைன் 125 பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2046 mm , அகலம் 737 mm மற்றும் உயரம் 1116 mm ஆகவும் வீல்பேஸ் 1285 mm , இருக்கை உயரம் 791 mm இறுதியாக கிரவுண்ட் கிளியரன்ஸ் 162 mm ஆக உள்ளது. இந்த மாடலில் 10.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.

2023 ஹோண்டா ஷைன் 125 பைக்கின் விலை Shine125 DRUM- Rs.81,610 மற்றும் Shine 125 DISC- Rs.85,610 (எக்ஸ்ஷோரூம்)

shine 125 bike price

   Honda Shine 125
Engine Displacement (CC) 123.94 cc Air-cooled
Power 10.59 hp @ 7500 rpm
Torque 11 Nm @ 6000 rpm
Gear Box 5 Speed

2023 ஹோண்டா ஷைன் 125 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை

Shine 125 DRUM- ₹. 98,410

Shine 125 DISC- ₹. 1,03,270

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற 125cc பைக் மாடல்களாக ஷைன் 125 மற்றும் எஸ்பி 125 விளங்குகின்றது. ஷைன் 125 பைக்கின் அடிப்படையில் ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் ஷைன் 100 என்ற மாடலையும் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் 125cc சந்தையில் உள்ள மாடல்களில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கி ப்ளூடுத் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த பல்வேறு அம்சங்களை கொண்ட பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் படிக்க – ஹோண்டா ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்

அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.