Honda Elevate price – ஹோண்டா எலிவேட் எஸ்யூவி பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

மிக கடும் போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்ற ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரின் அனைத்து முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெறுகின்ற இந்த காரின் வடிவமைப்பு மிக நேர்த்தியாக உள்ளதால் முதல் தலைமுறை கார் வாங்குபவர்களையும் ஹோண்டா கவர்ந்திழுக்கும் வகையில் தயாரித்துள்ளது.

Honda Elevate SUV

எலிவேட் எஸ்யூவி காரின் பரிமாணங்கள் 4,312mm நீளம், 1790mm அகலம், 1,650mm உயரம் மற்றும் 2,650mm வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த மாடலில் 458 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் உள்ளது. எலிவேட் காரில் 220mm கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.

elevate suv first look

ஹோண்டாவின் எலிவேட் உலகளாவிய பாதுகாப்பு தரத்திற்கு இணையான கட்டுமானத்தை பெற்று, பாதசாரிகள் பாதுகாப்பு, மல்டி ஆங்கிள் ரியர் கேமரா, அவசரகால ஸ்டாப் சிக்னல், ISOFIX இணக்கமான பின் பக்க இருக்கைகள் மற்றும் லோயர் ஏங்கரேஜ்கள் & டாப் டெதர், மற்றும் திருட்டு எதிர்ப்பு அலாரத்துடன் இம்மொபைலைசர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ADAS அடிப்படையிலான டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்ட ஹோண்டா சென்சிங் (Honda Sensing) அம்சத்தில் முன்னே செல்லும் வாகனத்தின் சாலையை ஸ்கேன் செய்வதற்கும், விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும், டிரைவரை எச்சரிப்பதற்கும் கண்டறிதல் அமைப்புடன் கூடிய உயர்-செயல்திறன் கொண்ட முன்பக்கக் கேமராவை கொண்டுள்ளது. மோதலின் தீவிரத்தை தவிர்க்க அல்லது குறைக்க தலையிடவும். மோதல் தணிப்பு பிரேக்கிங் சிஸ்டம் (சிஎம்பிஎஸ்), அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ரோடு டிபார்ச்சர் மிட்டிகேஷன் (ஆர்டிஎம்), லேன் கீப்பிங் அசிஸ்ட் சிஸ்டம் (எல்கேஏஎஸ்) மற்றும் ஆட்டோ ஹை-பீம் ஆகியவற்றை பெற்றுள்ளது.

honda elevate adas sensing

எலிவேட் இன்டிரியர்

டாஷ்போர்டின் நடுவில் ஃபீரி ஸ்டான்டிங் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை சிஸ்டத்துடன் பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது. எலிவேட் ஒற்றை-பேன் சன்ரூஃப் மட்டுமே பெறுகிறது.

வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வெப்லிங்க், புளூடூத் மற்றும் யுஎஸ்பி ஆகியவற்றை ஸ்மார்ட்போன் மூலம் இணைக்க முடியும். கூடுதலாக, விரிவான அனுபவமாக மாற்றும் வகையில், ASVM (உதவி பக்கக் காட்சி மானிட்டர்), ARVM (உதவி ரியர் வியூ மானிட்டர்), கடிகாரம், காலெண்டர், நேவிகேஷன், தனிப்பயனாக்கக்கூடிய படம் மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும்.

 

elevate suv dashboard

elevate front row seats

எலிவேட் என்ஜின்

ஹோண்டா சிட்டி காரில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜினை எலிவேட் எஸ்யூவி பகிர்ந்து கொள்ளுகின்றது. 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.

honda elevate headlamp

எலிவேட் போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் கடும் போட்டியாளர்களை கொண்ட C-பிரிவில் கிடைக்கின்ற  ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட பல்வேறு எஸ்யூவிகளுடன் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

honda elevate rear seats

எலிவேட் விலை எதிர்பார்ப்புகள்

இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஹோண்டா கார்ஸ் இந்தியா திட்டமிட்டு வருகின்றது. குறிப்பாக வரும் ஜூலை மாத தொடக்க வாரத்தில் முன்பதிவு துவங்க உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரின் விலை ரூ.11 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக கடுமையான போட்டியாளர்கள் நிறைந்த சந்தையில் ஹோண்டா நிறுவனம் சந்தையை எவ்வாறு எதிர்கொள்ளும் என காத்திருந்து அறிந்து கொள்ளலாம்.

honda elevate  cluster honda elevate wireless charging honda elevate rear view honda elevate boot space honda elevate suv

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.