இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
நம்பிக்கைரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் மீது ரஜினி மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளாராம். சமீபகாலமாக ரஜினியின் படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்பதால் இப்படம் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையில் ரஜினி இருக்கிறாராம். சமீபத்தில் இப்படத்தை போட்டு பார்த்த ரஜினிக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாம். எனவே இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடையும் என அடித்து கூறுகின்றாராம் ரஜினி
நட்சத்திரங்கள்ஜெயிலர் படத்தை பான் இந்திய படமாகவும், மல்டி ஸ்டாரர் படமாகவும் எடுக்க நினைத்த ரஜினி இப்படத்தில் இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். மலையாளத்தில் இருந்து மோகன்லால், கன்னடாவில் இருந்து ஷிவ்ராஜ்குமார், ஹிந்தியில் இருந்து ஜாக்கி ஷாரூப் என பல மொழி நடிகர்களை ஜெயிலர் படத்தில் ஒப்பந்தம் செய்தார் ரஜினி. இதன் பிறகு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பலமடங்கு உயர்ந்தது. இந்நிலையில் விக்ரம் படத்தை போல ஜெயிலர் படத்தையும் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக எடுத்து வெற்றி பெற ரஜினி திட்டமிட்டுள்ளார். இதைத்தவிர இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்
கதைக்களம்ஜெயிலர் படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினி ஜெய்லராக நடிப்பதாகவும், ஜெயிலில் இருந்து தப்பிக்க நினைக்கும் கைதிகளை ரஜினி எவ்வாறு தடுக்கிறார் என்பது தான் இப்படத்தின் ஒரு வரி கதை எனவும் பேசப்பட்டு வருகின்றது. இதுவரை வெளியான போஸ்டர்ஸ் மற்றும் கிலிம்ப்ஸ் வீடீயோவை பார்த்த ரசிகர்கள் இப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும். ரஜினியின் கெட்டப், ஸ்டைல் என அனைத்தும் கிலிம்ஸ் வீடியோவில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே படமும் அதுபோல ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது
ப்ரோமோஇந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. இதையொட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. அதற்கு முன்பே இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என தெரிகின்றது. பொதுவாக நெல்சன் ஒரு வித்யாசமான ப்ரோமோவின் மூலம் முதல் சிங்கிள் அறிவிப்பை வெளியிடுவார். டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களுக்கும் நெல்சன் இதைப்போல ஒரு ப்ரோமோ வெளியிட்ட நிலையில் தற்போது ஜெயிலர் படத்திற்கும் ஒரு வித்யாசமான ப்ரோமோவை ரெடி செய்துள்ளார் நெல்சன். இதன் படப்பிடிப்பு அனிருத்தின் ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றதாம். மேலும் இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தான் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் விரைவில் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வித்யாசமான ப்ரோமோவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது