இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Kamal Haasan’s Indian 2: இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசனுடன் யாரை மோதவிட்டிருக்கிறார் ஷங்கர் என்பது தெரிந்துவிட்டது.
இந்தியன் 2ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் இந்தியன் 2. படக்குழு தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. அங்கிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இந்நிலையில் தான் இந்தியன் 2 படத்தின் முக்கிய வில்லன் யார் என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது.சுனைனா”ரஜினி சார்னால தான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன்” சுனைனா ஓபன் டாக்!எஸ்.ஜே. சூர்யாகமல் ஹாசனுடன் மோதுவது வேறு யாருமில்லை கொடூரமான வில்லன் என பெயர் எடுத்த எஸ்.ஜே. சூர்யா தான். கமல், எஸ்.ஜே. சூர்யா மோதும் காட்சிகளை படமாக்கிவிட்டாராம் ஷங்கர். இந்தியன் 2 படத்தின் முக்கிய வில்லனே எஸ்.ஜே. சூர்யா தானாம். அவர் சும்மாவே கதறவிடுவார், இதில் ஷங்கர் படம் வேறு என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை படத்தை பார்த்தால் தான் தெரிய வரும்.
Kamal Haasan:ஹீரோ பிரபாஸுக்கு ரூ. 50 கோடி, ஆனால் வில்லன் கமலுக்கு ரூ. 150 கோடி சம்பளமா?!
https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/kamal-haasan-to-act-in-prabhass-project-k-here-is-the-truth/articleshow/100765760.cms
இந்தியன் 2அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன் கையில் இருக்கும் படங்கள் குறித்து பேசினார் எஸ்.ஜே.சூர்யா. அதில் ஒரு படம் மிகவும் பெரியது என்றார். அந்த படம் தான் இந்தியன் 2 என்பது தெரிய வந்துள்ளது. ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்தியன் 2 படத்திலும் அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளார் ஷங்கர்.
பொங்கல் ரிலீஸ்இந்தியன் 2 படத்தை 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் ஷங்கர். கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இந்தியன் 2 விக்ரமை விட பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கும் படமாக இந்தியன் 2 இருக்கிறது.
சித்தார்த்இந்தியன் 2 பற்றி சித்தார்த் பேட்டி ஒன்றில் கூறியதாவது, இந்த படத்தை எந்த மொழியில் ரிலீஸ் செய்தாலும் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான். இந்தியன் 2 பற்றி பேச ஆரம்பித்தால் 2 மாதங்களாவது பேசிக் கொண்டே இருப்பேன். அவ்வளவு விஷயம் இருக்கிறது. ஆனால் படம் குறித்து எதுவும் சொல்லக் கூடாது என ஷங்கர் சார் சொல்லி வைத்திருக்கிறார் என்றார்.
Kamal Haasan: இந்தியன் 2, கமல் பற்றி வேற லெவல் விஷயம் சொன்ன சித்தார்த்: ரொம்ப சந்தோஷம் ஆண்டவரே
விவேக்இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த விவேக், மனோபாலா ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை. அவர்கள் தொடர்பான காட்சிகளை நீக்காமல் படத்தில் காட்டவிருக்கிறார் ஷங்கர். விவேக்கையும், மனோபாலாவையும் மீண்டும் திரையில் பார்க்கும் ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த படத்தில் பாபி சிம்ஹா, ஜார்ஜ் மரியான், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தாத்தா1996ம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கி வருகிறார் ஷங்கர். இந்தியன் தாத்தாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் தாத்தா வேற லெவலில் சம்பவம் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.