Kamal Haasan: ரஜினியோ, கமலோ இல்ல: இந்தியாவில் முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமோ?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Megastar Chiranjeevi: இந்திய திரையுலகில் முதல் முயைறாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியது யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

​ரஜினி​படத்திற்கு படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம் பற்றி தான் ரசிகர்கள் வியந்து பேசுவதுண்டு. ரஜினிகாந்த் தற்போது படம் ஒன்றுக்கு ரூ. 120 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது இந்தியாவில் முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியதும் ரஜினியாகத் தான் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு.சுனைனா​”ரஜினி சார்னால தான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன்” சுனைனா ஓபன் டாக்!​​சிரஞ்சீவி​தற்போது எல்லாம் நடிகர்கள் ரூ. 100 கோடி சம்பளம் வாங்குவதே சாதாரணமாகிவிட்டது. ஆனால் முதல் முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியது அப்பொழுது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. அப்படி முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய இந்திய நடிகர் வேறு யாருமில்லை ரஜினியின் நண்பரான மெகாஸ்டார் சிரஞ்சீவி தான்.
​ரூ. 1 கோடி​கே. விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி ரிலீஸான தெலுங்கு படம் Aapadbandhavudu.கீரவாணி இசையமைத்த அந்த படத்திற்காக சிரஞ்சீவிக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. அதுவரை இந்தியாவில் எந்த நடிகரும் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியது இல்லை. இதையடுத்து சிரஞ்சீவியின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் போட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

​கமல் ஹாசன்​1992ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கியவராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இருந்தார். அவர் படம் ஒன்றுக்கு ரூ. 85 லட்சம் முதல் ரூ. 90 லட்சம் வரை வாங்கினார். இந்நிலையில் தான் அமிதாப் பச்சனை முந்திக் கொண்டு ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி அனைவரையும் வியக்க வைத்தார் சிரஞ்சீவி. அவரை அடுத்து ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியவர் உலக நாயகன் கமல் ஹாசன். கமலை அடுத்தே ரஜினியும் ரூ. 1 கோடி சம்பள கிளப்பில் சேர்ந்திருக்கிறார்.
​சூப்பர் ஸ்டார்​ரூ. 1 கோடி சம்பள கிளப்பில் ரஜினி லேட்டாக வந்தாலும் அதன் பிறகு படுவேகமாக வளர்ந்து மற்றவர்களை பின்னுக்குத் தள்ளி அதிக சம்பளம் வாங்கத் துவங்கினார் என்கிறார்கள் ரசிகர்கள். ரஜினிகாந்த் தற்போது தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தன் நண்பரான மறைந்த நடிகர் அம்பரீஷின் மகன் அபிஷேக்கின் திருமணத்தில் கலந்து கொண்டார். புதுச்சேரியில் இருந்த ரஜினியை பெங்களூரில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

​Rajinikanth: நண்பன் உயிருடன் இல்லை: அம்பரீஷ் மகன் திருமணத்தில் முதல் ஆளாக பங்கேற்ற ரஜினி

​இந்தியன் 2​கமல் ஹாசனோ தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷங்கர் இயக்கி வரும் அந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் முக்கிய வில்லனே எஸ்.ஜே. சூர்யா தான் என தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

​Kamal Haasan: பிறர் கதறுவதை கேட்டு மகிழ்பவரை இந்தியன் 2ல் கமலுடன் மோதவிட்ட ஷங்கர்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.