kinetic e-luna design – கைனட்டிக் இ-லூனா எலக்ட்ரிக் மொபெட்டின் படம் கசிந்தது

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் கைனடிக் இ-லூனா மொபெட் அறிமுகம் உறுதியானதை தொடர்ந்து வடிவமைப்புக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்த படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இ-லூனா வருகை குறித்து உறுதி செய்திருந்த நிலையில் தற்பொழுது முக்கிய விபரங்கள் கசிந்துள்ளது.

Kinetic E-Luna launch details

இ-லூனா வடிவமைப்பானது முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த பெட்ரோல் கைனடிக் லூனா போன்றே அமைந்துள்ளது. மிகப்பெரிய வரவேற்பினை பெற முக்கிய காரணமாக அமையலாம். கூடுதலாக பெடல் அசிஸ்டென்ஸ் கூட பெற வாய்ப்புகள் உள்ளது.

இந்த மாடலில் ஸ்பிளிட் சீட் பெற்று 16-இன்ச் வயர்-ஸ்போக் வீல் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்தை பெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்றிருக்கும். இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் ஆப்ஷனை பெற்றிருக்கும்.

எலக்ட்ரிக் மொபெட் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள இ-லூனா மின்சார மொபட்டின் வேகம் அதிகபட்சமாக 40-50kmph வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டிருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 100 கிமீ வரை பயணிக்கும் திறனை பெற்றிருக்கலாம்.

e-launa design

imagesource

விற்பனைக்கு 2023 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கைனடிக் இ-லூனா விற்பனைக்கு வரக்கூடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.