சென்னை: இயக்குநர் மிஷ்கின் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விவாகரத்துக்கான காரணம் பற்றி பேசியது பலரையும் கவர்ந்துள்ளது.
சித்திரம் பேசுதடி படத்தை 2006ம் ஆண்டு இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மிஷ்கின். தனக்கென ஒரு தனித்துவமான சினிமா ரசனையை கொண்டு படங்களை புதிய கோணங்களில் அணுகி வருபவர் மிஷ்கின்.
அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, சைக்கோ என பல படங்களை இயக்கி உள்ள மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்கி விட்டு அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
14 வருஷமா மனைவியுடன் பேசல: இயக்குநர் மிஷ்கின் தனது மனைவியுடன் 14 ஆண்டுகள் பேசாமல் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். திருமணத்துக்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இயக்குநர் மிஷ்கினுக்கு ஒரு மகள் உள்ளார். அவரும் அம்மாவுடன் தான் வளர்ந்து வருகிறார். நான் என் மனைவியுடன் இப்போதும் என் மகள் மூலமாக பேசி வருகிறேன் எனக் கூறிய மிஷ்கின், எப்போதாவது போனில் ஒரு வார்த்தை பேசினாலே அதை வைத்துக் கொண்டு ஓரிரு ஆண்டுகள் சந்தோஷம் அடைந்து கொள்கிறார் என்றார்.
மனைவி உங்களை விட்டுப் போக: விவாகரத்து செய்து விட்டோ மனசுக்கு பிடிக்காமலோ ஆண்கள் பெண்களை விட்டுப் பிரிய பல காரணங்கள் இருக்கும். ஆனால், மனைவி உங்களுடன் சேர்ந்து குழந்தையை எல்லாம் பெற்றுக் கொண்ட பின்னர், பிரிந்து செல்கிறார் என்றால் அதுக்கு ஒரு டீப்பான காரணம் இருக்கும் என பேசி உள்ளார்.
துரோகம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அதெல்லாம் சினிமாவில் தான் சர்வ சாதாரணமாக காட்டப்படும். நிஜ வாழ்க்கையில் நமக்கு ஒருவர் செயல் மீது வரும் அதீத கோபம் தான் அவர் நமக்கு துரோகம் செய்து விட்டார் என சொல்ல வைக்கிறது என தத்துவமாக அந்த பேட்டியில் பொழிந்து தள்ளி உள்ளார் மிஷ்கின்.
லியோவில் வில்லன்: நந்தலாலா படத்திலேயே நடிக்க ஆரம்பித்த இயக்குநர் மிஷ்கின் சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் வெளியாக உள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் விஜய்யின் லியோ படங்களிலும் இவர் தான் வெயிட்டான வில்லனாக நடித்துள்ளார்.