புவனேஸ்வரம்: மழைக்காக ரயிலின் கீழ் ஒதுங்கிய தொழிலாளர்கள் ஆறு பேர் மீது இன்ஜின் இல்லாத சரக்கு ரயில்ஏறியதில் பலியாயினர்.
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது. இதில் 275க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த துயர சம்பவ நினைவு மறையும் முன்னரே மீண்டும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசாவின் ஜஜ்பூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் இருந்து தப்பிப்பதற்காக தொழிலாளர்கள் நான்கு பேர் நின்று கொண்டிருந்த ரயிலின் கீழ் ஒதுங்கினர். ரயில் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் இன்ஜின் இல்லாமல் இருந்தது. இருப்பினும் பலத்த காற்று வீசியதன் காரணமாக சரக்கு ரயிலின் பெட்டிகள் தானாகவே நகர்ந்தது.அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலின் சக்கரத்தில் சிக்கி ஆறு பேர் வரையில் பலியானதாகவும்,இரண்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement