இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். திரைபிரபலங்கள் உட்பட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவரை பார்த்து சினிமாவில் சாதிக்கவேண்டும் என பல இளைஞர்கள் திரைத்துறைக்கு வருகின்றனர். கடின உழைப்பு இருந்தால் போதும் எந்த துறையிலும் வெற்றிபெறலாம் என எடுத்துக்காட்டிய பலருள் சூப்பர்ஸ்டாரும் ஒருவர்.
தன் 71 ஆவது வயதிலும் சினிமாவின் மீது கொண்ட காதல் காரணமாக சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகின்றார் ரஜினி. தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
ரசிகர்கள் போற்றும் சூப்பர்ஸ்டார்
இதைத்தொடர்ந்து ஞானவேலின் இயக்கத்தில் ஒரு படம் லோகேஷின் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகின்றார் ரஜினி. இந்நிலையில் தற்போது ரஜினியை பற்றி பலருக்கும் தெரியாத அறிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Leo: லியோ இசை வெளியீட்டு விழாவில் திடீர் மாற்றமா ? தீவிரமாக யோசித்து வரும் படக்குழு..!
அதாவது ரஜினி நடிகர் ரகுவரனுக்கு ஏன் தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பளித்தார் என்பது பற்றிய தகவல் தான் அது. 90 காலகட்டங்களில் பெரும்பாலும் ரஜினியின் படங்களில் ரகுவரன் வில்லனாக நடித்துக்கொண்டிருந்தார். ராஜா சின்ன ரோஜா, ஷிவா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம் என பல படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் ரகுவரன்.
ரசிகர்கள் விரும்பும் காம்போ
அதில் அனைத்து படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்தன. இந்நிலையில் ரஜினி ஏன் தொடர்ந்து ரகுவரனுக்கு தன் படங்களில் வாய்ப்பளித்தார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அதீத திறமை கொண்ட ரகுவரன் ஒரு காலகட்டத்தில் படவாய்ப்புகள் இன்றி தவித்து வந்துள்ளார்.
அப்போது ரகுவரனை பற்றி இயக்குனர் முத்துராமனிடம் விசாரித்துள்ளார் ரஜினி. அப்போது முத்துராமன் ரகுவரனின் நடிப்பு திறன் பற்றி கூற, இதுபோன்ற ஒரு திறமையான நடிகர் இப்படி படவாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடாது என தொடர்ந்து தன் படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பளித்தார் ரஜினி. அதன் பிறகு ரகுவரன் இந்திய திரையுலகே போற்றும் நடிகராக உருவெடுத்தார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இவ்வாறு ரஜினி ரகுவரனின் திறமை அறிந்து அவருக்கு வாய்பளித்துள்ளார். இந்நிலையில் பல மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த ரகுவரன் 2008 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். அப்போது அவருக்கு வயது 49 . இப்போதும் கூட சினிமா ரசிகர்கள் அனைவரும் ரகுவரனை மிஸ் செய்து தான் வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவரின் படத்தை டிவியில் பார்க்கும்போது இதுபோன்ற ஒரு நடிகரை தமிழ் சினிமா இழந்து விட்டதே என எண்ணி ரசிகர்கள் கவலைப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.