சென்னை: சின்னத்திரை பிரபலங்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுதா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், சில வாரங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் மோசமான அவதூறுகளை அடுக்கி கோலிவுட் ஜானி டெப் – ஆம்பர் ஹெர்டாகவே மாறிவிட்டனர்.
பல முன்னணி நடிகர்கள் சத்தம் காட்டாமல் விவாகரத்து செய்து பிரிந்து வரும் நிலையில், ஒருவரை ஒருவர் சந்தி சிரிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இருவரும் செயல்பட்டு வருவதாக நெட்டிசன்கள் இருவரையும் விளாசி வருகின்றனர். இந்நிலையில், சம்யுதா விஜய் வசனத்தை வைத்து புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
எல்லை மீறும் சீரியல் நடிகர்கள்: சினிமா பிரபலங்கள் அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம். ஒரு சீரியல், ஒரு யூடியூப் வீடியோவில் நடித்து விட்டாலே அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை, காதல், கள்ளத் தொடர்பு என இளம் நடிகர்கள் எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கின்றனர்.
பலர் பற்றிய தகவல்கள் வெளிப்படையாக தெரியாமல் ரகசியம் காத்து வரும் நிலையில், சிலர் வெளிப்படையாகவே தங்களை தாங்களே டோட்டல் டேமேஜ் செய்து வருகின்றனர். அப்படித்தான் சமீப காலமாக சம்யுதா மற்றும் விஷ்ணுகாந்தின் பிரச்சனை பெரிய பஞ்சாயத்தாக மாறி உள்ளது.
மாற்றி மாற்றி குற்றச்சாட்டு: விஷ்ணுகாந்த் சரியில்லை என்பதால் அவரை விட்டுப் பிரிந்தேன் என சம்யுதாவும், சம்யுதாவுக்கு இன்னொரு நபருடன் தொடர்பு இருக்கு என விஷ்ணுகாந்தும் மாற்றி மாற்றி காதலித்தவர்களையே கன்னா பின்னாவென பேசி அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
ஆடியோ ரிலீஸ் செய்வதும், வீடியோவில் விஜய் பட வசனங்களை வைத்து மறைமுகமாக பதிலடி கொடுத்து விளையாடுவதாக உள்ளனர். இருவரது சோஷியல் மீடியா ஃபாலோயர்களும் கமெண்ட் பக்கத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.
விஜய் ஆடியோ: சம்யுதா தீவிர விஜய் ரசிகர் என்பதால் விஷ்ணுகாந்துக்கு பதிலடி கொடுக்க நடிகர் விஜய் பேசிய ஆடியோக்களை வைத்தே இவர் பேசுவது போல டப்ஸ்மாஷ் செய்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது லேட்டஸ்ட்டாக நாம எடுக்க வேண்டிய ஆயுதத்தை எதிரி தான் முடிவு பண்றான். வெட்ட வருபவனுக்கு வெள்ளைக் கொடியா காட்ட முடியும் என விஜய் பேசிய ஒரு வசனத்தை வைத்து தனது ஹேட்டர்களுக்கும் தன்னை பற்றி அவதூறு பரப்பி வரும் விஷ்ணுகாந்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார் சம்யுதா.
அதை பார்த்த ரசிகர்கள், இதற்கு விஷ்ணுகாந்த் ஒரு வீடியோ போடுவார், அதற்கு இவர் பதிலளித்து இன்னொரு வீடியோ போடுவார் என கமெண்ட் போட்டு விளாசி வருகின்றனர்.