சென்னை : கமல் மட்டும் தான் பான் இந்தியா ஸ்டார் என்று நடிகர் சித்தார்த் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த்.
இவர் நடிப்பில் உருவாகி உள்ள டக்கர் திரைப்படம் ஜூன் 9ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
நடிகர் சித்தார்த் : இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யன்ஷா கெளசிக், முனீஷ்காந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் டக்கர். இப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளதால், இப்படத்தின் ப்ரோமோஷன் படுவேகமாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட சித்தார்த் படம் குறித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கமல் தான் பான் இந்தியா ஸ்டார் : அப்போது பிடித்த நடிகர் குறித்து பேசிய சித்தார்த், நான் கமலின் ரசிகன் என்று சொல்வதைவிட கமலின் தீவிர வெறியன் என்று சொல்ல வேண்டும். இந்தியாவிலேயே மிகவும் உயர்ந்த, அனைவராலும் வியந்து பார்க்கக்கூடிய ஒரே பான் இந்தியா ஸ்டார் யார் என்றால் அது கமல் மட்டும் தான். ஏன் என்றால் பான் இந்தியா என்பதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. ஒருத்தர் தான் எங்கே போனாலும், நான் அந்த ஊர்காரன் என்று நிரூபித்து நடிக்கத் தெரிந்தவன் தான் பான் இந்தியா ஸ்டார்.
டிரெண்டாகு வீடியோ : எங்கேயோ ஒருத்தர் பிரபலமாக இருக்கிறார் அவர் படத்தை இங்கு பாருங்கள் என்றால் அது பான் இந்தியா இல்லை என்னை பொறுத்தவரை கமல் தான் பான் இந்தியா ஸ்டார் என்று நடிகர் சித்தார்த் கமல் பற்றி நெகிழ்ந்து பேசினார். இந்த பேட்டியை உலகநாயகனின் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
தனிப்பட்ட வாழ்க்கை : 2019ம் ஆண்டு அருவம் படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த் நடிப்பில் எந்த படமும் வெளியாக வில்லை, கிட்டத்தாட்ட நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது டக்கர் படம் வெளியாக உள்ளதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும்,சித்தார்த் தெலுங்கில் மகாசமுத்திரம் என்ற படத்தில் அதிதி ராவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அதிதி ராவ் குறித்தும் கேட்கப்பட்டது. இது தனிப்பட்ட வாழ்க்கை என்று அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.