simple one escooter – சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி துவங்கியது

அதிக ரேஞ்சு வழங்குகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரான சிம்பிள் எனர்ஜின் நிறுவனத்தின் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகம் முதற்கட்டமாக பெங்களூரூவில் துவங்கப்பட்டுள்ளது. படிப்படியாக பல்வேறு முன்னணி நகரங்களில் டெலிவரி துவங்க உள்ளது.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பெங்களூருவில் 15 ஸ்கூட்டர்கள் டெலிவரி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்குள் 40-50 நகரங்களில் 160-180 ஷோரூம்களை துவங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

Simple One Escooter

5Kwh பேட்டரி பெற்றுள்ள மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 212 கிமீ பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்பிள் ஒன் எலகட்ரிக் ஸ்கூட்டர் 150-180Km வரை வழங்ககூடும். ஈக்கோ மோடு எனபது 45 Km/h என வரையறுக்கப்பட்டுள்ளது.

சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் ஈக்கோ, ரைடு, டாஷ் மற்றும் சோனிக் ஆகிய நான்கு ரைடிங் மோடுகளைக் கொண்டுள்ள ஸ்கூட்டரில்  0-40km வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.77 விநாடிகளை எடுத்துக் கொள்ளும்.

ஒன் மின்சார ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 105km/h ஆகும். 90/90-12 அங்குல வீல் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்பிள் ஒன் எலகட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு), டூயல் டோன் கொண்ட மாடல்களின் விலை ரூ.5,000 கூடுதலாகும் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனை தனியாக ரூ.13,000 கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.