Sivakarthikeyan: மீண்டும் அதிரடியில் இறங்கிய சிவகார்த்திகேயன்: ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது உலக நாயகன் கமல் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் துவங்கிய இதன் படப்பிடிப்பு ஒருசில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ‘எஸ்கே 21’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சின்னத்திரையில் டான்ஸ், மிமிக்ரி, தொகுப்பாளர் என கலக்கி வந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘மாவீரன்’ படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இவர் யோகி பாபு நடிப்பில் ‘மண்டேலா’ படத்தை இயக்கியவர். விமர்சனரீதியாக இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கி வருகிறார் மடோன் அஸ்வின்.

அண்மையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபல இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படம் வரும் ஜுலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Meena: காருக்கு பின்னாடி நின்று உடை மாற்றிய மீனா: பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்.!

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ‘எஸ்கே 21’ பட அறிவிப்பு அண்மையில் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப்படத்தை உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடிக்கும் இந்தப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். ‘எஸ்கே 21’ படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் காஷ்மீர் பறந்தனர்.

ஆனால் ஒரு சில காரணங்களால் ‘எஸ்கே 21’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது மீண்டும் காஷ்மீரில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதுக்குறித்த அறிவிப்பை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘எஸ்கே 21’ பட கெட்டப் வெளியில் தெரியாமல் இருக்க சிவகார்த்திகேயன் தற்போது அனைத்து இடங்களுக்கு தலையில் குல்லாவுடன் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

Captain Miller: ‘கேப்டன் மில்லர்’ படத்துல வசனம் கம்மி.. ‘அது’ தூக்கல்: வேறலெவல் அப்டேட்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.