மும்பை : நடிகை தமன்னா ஜெயிலர், அரண்மனை 4 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிப்படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் இந்தி நடிகர் விஜய் வர்மாவிற்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இருவரும் தொடர்ந்து மௌனம் காத்துவரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக இரவில் வெளியில் சென்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமன்னா கலக்கல் போட்டோக்களுக்கு லைக் போட்ட விஜய் வர்மா :நடிகை தமன்னா தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். அதிகமான கலருடன், உடல் வாகும் சிறப்பாக இருந்த நிலையில், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவரை மில்க்கி ப்யூட்டி என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து சினிமாவில் 18 ஆண்டுகளை கடந்து இவர் நீடித்து வருகிறார். நகை வியாபாரத்தை துவங்கி அதையும் சக்சஸ்புல்லாக நடத்தி வருகிறார்.
தமிழில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள தமன்னா, தற்போது வரை தமிழில் நடித்து வருகிறார். ரஜினியுடன் ஜெயிலர் படம் மற்றும் சுந்தர் சியுடன் அரண்மனை 4 ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படங்களை தொடர்ந்து மீண்டும் தமிழில் தனது ரீ என்ட்ரியை சிறப்பாக அமைப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் இவர் நடித்து வருகிறார்.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தமன்னாவிற்கு படத்தில் என்னமாதிரியான கேரக்டர் அமைந்துள்ளது என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதேபோல அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி விலகிய நிலையில், சுந்தர் சியே தற்போது நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் தமன்னாவின் கேரக்டர் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ள நிலையில், தமன்னாவின் மார்க்கெட் வேல்யூ தமிழில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். பாலிவுட்டிலும் படங்களில் நடித்துவரும் தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தற்போது டேட்டிங்கில் உள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், ரசிகர்களிடம் சொல்லிவிட்டுதான் தான் திருமணம் செய்வேன் என்று தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் விஜய் வர்மாவுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமன்னா இரவில் சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் தமன்னா. அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது க்ராப் டாப்பில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் புகைப்படங்களில் உள்ளாடை தெரிய அவர் அணிந்துள்ள க்ராப் டாப் அவருக்கு ஒரு மணிநேரத்திலேயே 2.30 லைக்ஸ்களை பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில் இந்த புகைப்படங்களுக்கு தமன்னாவின் காதலராக கிசுகிசுக்கப்படும் விஜய் வர்மாவும் லைக் செய்துள்ளார். அடுத்தடுத்து வெளியில் அதிகமாக தலைக்காட்டி வருகிறது இந்த ஜோடி. சமீபத்தில் முத்தங்களை ஷேர் செய்த புகைப்படங்களையும் வெளியிட்டது. இந்நிலையில் தமன்னாவின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கும் விஜய் வர்மா தற்போது லைக் செய்துள்ளது. இவர்களது உறவை மேலும் உறுதி செய்துள்ளது.