மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை தமன்னா பாலிவுட் வெப்தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் நடிக்க பல கோடிகளை சம்பளமாக வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகுபலி படத்திற்கு பிறகு நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவோம் என நினைத்த தமன்னாவுக்கு பாகுபலி 2வில் அனுஷ்கா ஸ்கோர் செய்ய அவரது கனவு காணாமல் போனது.
தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் கிடைக்காத நிலையில், பெட்டர்மாக்ஸ் படத்தில் நடித்த தமன்னா ஓடிடி பக்கம் ஒதுங்கி நவம்பர் ஸ்டோரியில் நடித்திருந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட் பக்கம் நகர்ந்த தமன்னாவுக்கு தற்போது வாய்ப்புகள் தாறுமாறாக குவிந்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ஜோடி: தமிழில் முன்னணி நடிகர்களான விஜய்யுடன் சுறா படத்தில் நடித்த தமன்னா அஜித் உடன் வீரம் படத்தில் நடித்திருந்தார். தனுஷ், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வந்த தமன்னா முதன்முறையாக ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்து வருகிறார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தமன்னா அந்த படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்சீரிஸில் செம ஹாட்டாக: பப்ளி பவுன்சர் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும், தமன்னாவுக்கு பெரிய ஹிட் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் தமன்னா.
அமேசான் பிரைமில் விரைவில் ஜீ கர்தா வெளியாக உள்ள நிலையில், இந்த மாத இறுதியில் நெட்பிளிக்ஸில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெளியாகிறது. இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் நடிக்க நடிகை தமன்னாவுக்கு அதிகபட்ச சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமன்னா சம்பளம்: நடிகை தமன்னா 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வந்தாலும் நயன்தாரா, சமந்தா எல்லாம் வாங்கும் அளவுக்கு சம்பளம் வாங்குவதில்லை.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் நடிக்கவே தமன்னாவுக்கு 4 கோடி ரூபாய் தான் சம்பளம் என்கின்றனர். இந்நிலையில், ஓவர் கிளாமர் நிறைந்த லோ பட்ஜெட் ஆந்தாலஜியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் நடிக்கவும் 4 கோடி ரூபாய் சம்பளமாக தமன்னா வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் பிரைமில் வெளியாக உள்ள ஜீ கர்தா வெப்தொடரில் நடிக்கவும் அதே சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
கஜோலுக்கு 3 கோடி: அதே ஆந்தாலஜியில் நடித்துள்ள நடிகை கஜோலுக்கு இந்த வயதிலும் அவருக்கு 3 கோடி ரூபாய் சம்பளத்தை பேசி லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் நடிக்க வைத்துள்ளனர் என்கின்றனர்.
4 இயக்குநர்கள் உருவாக்கி உள்ள 4 தனித்தனி கதைகளுக்கும் சேர்த்து மொத்தம் 60 கோடி தான் பட்ஜெட் என்கின்றனர். இதில், நடிகைகள் தான் பிரதானம் என்பதால் அவர்களுக்கான சம்பளத்தில் மட்டும் தயாரிப்பு தரப்பு கை வைக்கவில்லையாம்.
மிருணாள் தாகூர் சம்பளம்: நடிகை தமன்னாவுக்கு தான் அதிகப்படியாக 4 கோடி சம்பளம் அந்த ஆந்தாலஜியில் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கஜோலுக்கு 3 கோடி ரூபாயும் சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாகூருக்கும் சுமார் 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 டீசரில் திருமணத்துக்கு முன்னாடி டெஸ்ட் டிரைவ் பண்ணனும்னு பேசுகிற பாட்டியாக நடித்துள்ள பழம்பெரும் நடிகை நீனா குப்தாவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.