Thalapathy Vijay: எனக்காக வரமாட்டியாடா?: கோபத்தில் நண்பர் சஞ்சீவுடன் பேசுவதை நிறுத்திய விஜய்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Sanjeev about Thalapathy Vijay: தளபதி விஜய் கோபத்தில் தன் நண்பர் சஞ்சீவுடன் 6 மாதமாக பேசாமல் இருந்தது தெரிய வந்திருக்கிறது.

​விஜய்​நட்பை மதிப்பவர் தளபதி விஜய். அவரது நட்பு வட்டாரம் சிறியது. அதில் இருக்கும் யாரையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவே மாட்டார். விஜய்யின் நண்பர்களில் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர் சஞ்சீவ். டிவி சீரியல்களில் நடித்து வரும் சஞ்சீவ் தன் நண்பர் விஜய்யின் பத்ரி, புதிய கீதை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். நண்பன் விஜய்யை பற்றி அவ்வப்போது பெருமையாக பேசுவார்.

​Vijay: ஜூன் 17ம் தேதி நீலாங்கரையில் மாணவ, மாணவியரை கவுரவிக்கும் விஜய்ரெஜினா​”ரெஜினா” பட டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா..!​​சஞ்சீவ்​விஜய்யும், சஞ்சீவும் ஒரே பகுதியில் தான் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் சஞ்சீவுடன் பேசாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. விஜய் மற்றும் அவரின் நண்பர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சி செய்ய பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று முடிவு செய்ததாம். அவர்கள் சஞ்சீவை தொடர்பு கொண்டபோது, சாரி என்னால் பங்கேற்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
​கோபம்​அந்த டிவி சேனல் தொடர்பு கொண்டபோது கை நிறைய சீரியல்கள் வைத்து ஓடியோடி நடித்துக் கொண்டிருந்தாராம் சஞ்சீவ். சீரியல்களுக்கு ஏற்கனவே டேட்ஸ் கொடுத்துவிட்டதால் விஜய்யுடன் சேர்ந்து டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதாம். சஞ்சீவ் நோ சொன்ன விஷயம் அறிந்த விஜய், ஏன்டா எனக்காக கூட வர மாட்டியா என கோபித்துக் கொண்டு, 6 மாதமாக அவருடன் பேசவே இல்லையாம்.
​மகிழ்ச்சி​தன் வீட்டிற்கு அருகில் தான் சஞ்சீவின் வீடு இருந்தாலும் அந்த வழியாக சென்றாலும் கூட கண்டுகொள்ளவில்லையாம். ஆறு மாதம் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும், சஞ்சீவும் சந்தித்திருக்கிறார்கள். அப்பொழுது பழைய கோபத்தை எல்லாம் மறந்துவிட்டு என்னடா நண்பா என சாதாரணமாக பேசத் துவங்கினாராம் விஜய். இந்த தகவலை சஞ்சீவ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

​ரஜினியோ, கமலோ இல்ல: இந்தியாவில் முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமோ?

​சாப்பாடு​முன்னதாக கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டபோது சஞ்சீவுக்காக விஜய் செய்ததை மறக்க முடியாது. சஞ்சீவுக்கு கொரோனா பாதிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து அவர் தன் மனைவி, பிள்ளைகளை அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தனியாக இருந்தார். இது குறித்து அறிந்த விஜய்யோ சஞ்சீவுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். உள்ளே வராத விஜய் என்று சஞ்சீவ் சொல்ல காவலாளியிடம் உணவை கொடுத்துச் சென்றார் விஜய்.

​Friendhsip day: அந்த செய்தி கேட்டு, உயிர் நண்பன் சஞ்சீவுக்காக ஓடோடி வந்த விஜய்

​பயம்​எங்கே விஜய் உள்ளே வந்தால் அவருக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்பதே சஞ்சீவின் பயம். ஆனால் விஜய்க்கு அந்த பயம் எல்லாம் இல்லை. நண்பன் தனியாக இருக்கிறானே, சாப்பாட்டுக்கு என்ன செய்வான் என தானே கொண்டு வந்திருக்கிறார். இப்படி ஒரு நண்பன் கிடைக்க சஞ்சீவ் கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும்.

​லியோ​கெரியரை பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவரின் அறிமுக பாடலை தான் தற்போது ஷூட் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த பாடலில் விஜய்யுடன் சேர்ந்து 500 பேர் ஆடுகிறார்களாம். இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் இதுவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. லியோ படம் அக்டோபர் 19ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

​Leo:விஜய்யின் கோட்டையில் ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடித்த லியோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.