சென்னை : பிரபலமான இயக்குநர் ஷங்கரால் இளம் நடிகை ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் கதறி அழுதுள்ளார்.
பிரம்மாண்டதற்கு பெயர் போன இயக்குநர் ஷங்கர், இந்தியன், எந்திரன் என பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறிஉள்ளார்.
தற்போது இவர் இந்தியன் 2 திரைப்படத்தையும், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குநர் ஷங்கர் : இயக்குநர் ஷங்கர் ஜென்டில் மேன் என்ற மாஸ் வெற்றிப்படத்தை கொடுத்து திறமையான இயக்குநர் என்று பெயர் எடுத்தார். இந்தபடத்தை தொடர்ந்து பிரபு தேவாவை வைத்து காதலன் என்ற படத்தை இயக்கி அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக மாறினார். இந்த படத்தைத் தொடர்ந்து இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் படத்தை இயக்கி பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தார்.
இந்தியன் 2 : இந்தியன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனைவரும் இந்தியன் 2 படம் எப்போது வரும் என்று கேட்டுவந்த நிலையில் 4 வருடத்திற்கு முன் படத்தின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணி தொடங்கியது. ஆனால் விபத்து காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு, தற்போது படப்பிடிப்பு சூடுபிடித்துள்ளது.
த்ரோபேக் வீடியோ : இந்நிலையில் பாய்ஸ் படம் வெளியானது இப்படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து ஷங்கர் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெனிலியாவுக்கு தமிழ் தெரியாததால்,டயலாக் பேப்பரை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிடுவாராம்.
கதறி அழுத நடிகை : இப்படித்தான், ஒருநாள் இரண்டு பக்க கடினமான டயலாக் பேப்பரை ஜெனிலியாவிடம் கொடுத்துவிட்டார். அப்போது அந்த பேப்பரை பார்த்த ஜெனிலியா அழ துவங்கிவிட்டார். இதைப்பார்த்தும் எனக்கே பதற்றமாகி விட்டது. பிறகு விசாரித்தால், வசனத்தைப்பார்த்து அழுதார் என்பது தெரிகிறது. நான் தான் அவரை சமாதானம் செய்து வசனங்களை சொல்லி கொடுத்தேன் என்றார்.