இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் நீண்ட கால ஆசையாகும். அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும்போது எல்லாம் வருங்கால முதல்வரே, தமிழகத்தின் எதிர்காலமே, தமிழர்களின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளிட்ட வாசகங்களை சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.
“ரஜினி சார்னால தான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன்” சுனைனா ஓபன் டாக்!
விஜய்யை தமிழக முதல்வராக பார்க்க தளபதி ரசிகர்கள் விரும்புகிறார்கள். ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் வகையில் அரசியலுக்கு வர ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் தான் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவச் செல்வங்களை கவுரவிக்க முடிவு செய்துள்ளார் விஜய் என தகவல் வெளியாகி தீயாக பரவியது. அந்த தகவல் வெறும் வதந்தி அல்ல உண்மை தான் என்பது இன்று தெரிய வந்திருக்கிறது.
மாணவ, மாணவியரை விஜய் கவுரவிப்பது உண்மை தான் என விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது!
தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தளபதி விஜய் அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையை பார்த்த தளபதி ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
இது வெறும் ஆரம்பம் தான். எங்கள் விஜய்ணா முதல்வர் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்காமல் ஓய மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் அறிமுக பாடலை சென்னையில் ஷூட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த பாடலில் விஜய்யுடன் சேர்ந்து 500 பேர் ஆடுகிறார்களாம். இது குறித்து அறிந்தவர்களோ, இந்த பிரமாண்டம் எல்லாம் லோகேஷ் கனகராஜ் ஸ்டைலே இல்லையே. தளபதியை வைத்து ஏதோ பெருசா பிளான் பண்ணுகிறார் போன்று என தெரிவித்துள்ளனர்.
Leo:விஜய்யின் கோட்டையில் ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடித்த லியோ
இதற்கிடையே லியோ படத்தின் கேரள மாநில தியேட்டர் உரிமம் ரூ. 16 கோடிக்கு சென்றிருக்கிறது. இதன் மூலம் கேரளாவில் அதிக விலைக்கு போன தமிழ் படமாக லியோ இருக்கிறது. இதற்கு முன்பு அந்த பெருமை ரஜினியின் 2.0 படத்திற்கு தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.