சென்னை : நடிகர் விஜய் வருகிற 17ந் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தற்போது வெளிப்படையாகி உள்ளன. நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது
தமிழக முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொகுதி வாரியாக மாணவ மாணவிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுக்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுவதால், அனைத்து கட்சியின் பார்வையும் விஜய் மக்கள் மீது உள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் : கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட நற்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபகாலமாக சமூகம் சார்ந்த பல விஷயங்களை விஜய் மக்கள் நற்பணி இயக்கம் முன்னெடுத்து செய்து வருகிறது.
சமீபத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டி, விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் உடனான சந்திப்பு, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பது, அன்னதானம் செய்வது, பள்ளி மாணவர்களின் சத்துணவுக்கான பங்களிப்பு போன்ற பல்வேறு நலத்திட்டங்களை விஜய் மக்கள் இயக்கம் செய்து வந்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்து மாணவர்களை தொகுதி வாரியாக நடிகர் விஜய் சந்தித்து அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார். அந்த இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை ஆர்.கே. கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே தனது அரசியல் அஸ்திவாரத்தை பலமாக மாற்றி வரும் நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் வருகிற நாடாளுமன்றத் தேர்தல் அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் செயல்படுவதாகவும் அதற்கு ஏற்றார் போலவே நடிகர் விஜய்யும் முன்னெடுப்பு நடவடிக்கை செய்வதாகவும் கூறப்படுகிறது.