லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி ‘டாஸ்’ வென்று, ‘பவுலிங்’ தேர்வு செய்தது. இப்போட்டியில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டையுடன் விளையாடினர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலுக்கு தகுதி பெறும்.
அந்த வகையில் 2021ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. அதில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.
அந்த வகையில் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தகுதிப்பெற்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன் 7) துவங்கியது. அதில், ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய அணி:
ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராத் கோஹ்லி, ரகானே, ஸ்ரீகர் பரத், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, லபுசேன், ஸ்மித், ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலந்து
கையில் கருப்பு பட்டை
இந்த பைனலில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்