அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி வாதங்கள் நடந்து வருகின்றன
அப்போது, கட்சியின் அனைத்து முடிவுகளையும் தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் என்று, அதிமுக தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் பொதுக்குழுவால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிமுக தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்களை விட உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழுவுக்கு தான் உள்ளது என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி விதிப்படி பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது என்றும், அதிமுக தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.
கட்சியின் சட்ட ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதிமுக தரப்பு வழக்கறிஞர் எனது வாதத்தை முன்வைத்தார்.