சென்னை துணை நடிகரின் கார் மோதியதில் வெற்றிமாறனிடம் துணை இயக்குநராக பணிபுரியும் சரண் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 26.
இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் விபத்தை ஏற்படுத்திய நபர் குடிபோதையில் காரை அதிவேகத்தில் ஓட்டிவந்ததை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
துணை நடிகர் சரண்ராஜ் : இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றி வரும் சரண்ராஜ். வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக ஒரு சில காட்சியில் நடித்துள்ளார். மதுரவாயல் தனலட்சுமி தெருவை சேர்ந்த இவர், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில், கே.கே.நகர், ஆற்காடு சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் அதி வேகமாக வந்த கார் சரண்ராஜ் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திலேயே பலி : இதில், விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் 108 அம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், சரண்ராஜின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடிபோதையில் விபத்து : இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவலதுறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதி, விபத்தை ஏற்படுத்திய நபர் சாலிகிராமம் எம்.சி.அவென்யூ பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பதும், அவரும் சினிமாவில் துணை நடிகராக இருப்பதும் தெரியவந்தது. விபத்து நடந்த போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.