டில்லி அதி தீவிர புயலாக வலுவடைந்து வரும் பிபோர்ஜாய் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திங்கள்கிழமை மாலை தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. செவ்வாய்க்கிழமை காலை இத் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. பிறகு இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. புதன் அன்று அந்தப் புயல் மேலும் வலுவடைந்து தீவிரப் புயலாக மாறியது. […]