சென்னை: முன்பெல்லாம் சினிமாவில் மார்க்கெட் குறைந்த பின்னர் சின்னத்திரையில் நடிகைகள் கலக்கி வந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.
தற்போது சின்னத்திரையில் நடிகையாக சான்ஸ் கிடைத்தால் போதும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டே ஹீரோயின் ஆகி விடலாம் என பல நடிகைகள் முண்டியடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீரியல் நடிகை ஒருவர் சினிமா ஹீரோக்களுடன் மிக நெருக்கமான சகவாசத்துடன் பழகி வருவதே சினிமாவில் எப்படியாவது பெரிய நடிகையாகி விட வேண்டும் என்கிற நோக்கில் தான் என்கின்றனர்.
பட வாய்ப்புக்காக: சின்னத்திரை நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படாத பாடு பட்டு வருகின்றனர். பல இளம் மாடல்கள் சினிமா வாய்ப்பை எல்லாம் எதிர்பார்க்காமல் உடனடியாக சீரியலில் ஏதாவது நடிக்க சான்ஸ் கிடைத்தால் போதும் என சின்னத்திரை நடிகையாகி விடுகின்றனர்.
கொஞ்ச நாட்களிலேயே அவர்கள் நடித்த சீரியல்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக அவர்கள் வெளியிடும் போட்டோக்கள் டிரெண்டானாலே போதும் ஹீரோயின் சான்ஸ் அவர்களுக்கு டிஎம் வழியாகவே வந்து விடுகிறது என்கின்றனர்.
ரூட்டே சரியில்லை: பிரபலமான சின்னத்திரை சீரியலில் டாப் ஹீரோயினாக வலம் வரும் அந்த பப்ளி நடிகை சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்களை விட சில சினிமா ஹீரோக்களை ரகசியமாக சந்தித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சினிமா வாய்ப்புக்காகத் தான் நடிகை இளம் நடிகர்களுடன் சுற்றி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டாலும், ஒரு சில நடிகர்களுடன் அந்த சீரியல் நடிகை எல்லை மீறி செல்வதாக ஷாக்கிங் தகவல்கள் லீக் ஆகி உள்ளன.
ஹேண்ட்ஸம் ஹீரோவுடன்: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த அந்த ஹேண்ட்ஸம் ஹீரோவுடன் தான் தற்போது படு நெருக்கமாக அந்த சீரியல் நடிகை பழகி வருகிறார் என்றும் எப்படியாவது அவருடன் ஒரு படத்தில் சீக்கிரம் நடிக்க வேண்டும் என்பதால் ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட்டுகளை அந்த சீரியல் நடிகை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், இப்போதைக்கு ஒரு சில படங்களில் ஹீரோயின் புக் ஆகி விட்டனர் என்றும் அடுத்த படத்தில் நிச்சயம் ஹீரோயின் ஆக்குகிறேன் என்றே வாக்கு கொடுத்தே அந்த நடிகையை ஏமாற்றி அந்த இளம் நடிகர் உல்லாசம் காண்கிறார் என்றும் பேச்சுக்கள் பகீரை கிளப்பி உள்ளன.