சென்னை : சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை இணையத்தில் அதகளமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கன்னட நடிகையான ரம்யா, புனீத் ராஜ்குமாருடன் இணைந்து அபி என்ற படத்தில் நடித்து சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
அதன் பின் பிரபலமான நடிகை ரம்யா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
நடிகை திவ்யா ஸ்பந்தனா : நடிகை ரம்யாவின் உண்மையான பெயர் திவ்யா ஸ்பந்தனா, இவர் சினிமாவுக்காக தனது பெயரை ரம்யா என மாற்றிக் கொண்டார். பிரபல கன்னடத் தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார் தான், ரம்யா என்ற பெயரை அவருக்கு சூட்டினார். கன்னடத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் ரம்யா.
டாப் ஹீரோக்களுடன் : சிம்பு நடித்த குத்து படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து, தனுஷூடன் பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடம், தமிழ்,தெலுங்கு என மொத்தம் 36 படங்களில் நடித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு வெளியான நாகரஹாவு என்ற கன்னட படம் தான் இவர் நடித்த கடைசி படமாகும்
காங்கிரஸ் கட்சியில் : படங்களில் நடித்து வந்த ரம்யா திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதி எம்பி ஆனார். கட்சிப்பணிகளில் பிஸியாக இருந்ததால் நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டார். தற்போது, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் ரம்யா.
நல்ல கதைக்காக : நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த ரம்யா, மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளேன். கடந்த சில நாட்களாக கதைகளை கேட்டு வருகிறேன், நல்ல கதையாக இருந்தால் விரைவில் நடிப்பேன் என்று நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
யாரும் நம்பமாட்டாங்க : இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பேன்டா நிற மெல்லிய சேலையில் முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி, என்னா கிளாமர் என்றும், உங்களுக்கு 40 வயசுனு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க என்றும் அந்த போட்டோவிற்கு லைக்குகளை போட்டு இணையத்தை தெரிக்கவிட்டு வருகின்றனர்.