மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அம்ருதா ஃபட்னாவிஸுக்கும், பிரபல கிரிக்கெட் புக்கியான அனில் ஜெய்சிங்கனிக்கும் இடையே நடந்த உரையாடல் அடங்கிய குற்றப் பதிவுகளை வைத்திருப்பதாக, தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “உத்தவ் தாக்கரே தலைமையிலான எம்.வி.ஏ. கூட்டணியை வீழ்த்தி, ஏக்நாத் ஷிண்டே மற்றும் அனில் பராப்பை சிக்க […]