திருப்பதி : ஆதிபுருஷ் படவிழாவில் திருமணம் குறித்த முக்கியமான தகவலை கூறி, ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளார் பிரபாஸ்.
ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா திருப்பதியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்த நிகழ்ச்சியை படக்குழு நடத்திமுடித்துள்ளது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், பிரபாஸ்,கீர்த்தி சனோன், சைப் அலி கான், இயக்குநர் ஓம் ரவுத், இசையமைப்பாளர் படக்குழுவினர் என பலர் கலந்து கொண்டனர்.
ஆதிபுருஷ்: ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ஆதிபுருஷ் திரைப்படத்தில், ராமராக பிரபாஸும், சீதாவாக பாலிவுட் நாயகி கிருத்தி சனோனும் நடித்துள்ளனர். ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலி கான் நடித்துள்ளார். ஓம் ரவுத் இயக்கியுள்ள இந்த படத்தை, அதிக பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமான பட்ஜெட்டில் பூஷன் குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 16ந் தேதி உலக முழுவதும் வெளியாக உள்ளது.
திருப்பதியில் தரிசனம் : படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளதால் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று திருப்பதியில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த, நடிகர் பிரபாஸ், ஆதிபுருஷ் படம் வெற்றிப்படமாக அமைய திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
திருமண அறிவிப்பு : இதையடுத்து விழாவில் ரசிகர்களின் பல கேள்விக்கு பிரபாஸ் பதில் அளித்து வந்தார். அப்போது, பல ரசிகர்கள் எப்போது திருமணம் என தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தனர். அந்த கேள்விக்கு பதில் பிரபாஸ், திருமணம் என்றாவது ஒரு நாள் கட்டாயம் நடக்கும், அப்படி நடந்தது என்றால், அது கண்டிப்பாக திருப்பதியில் தான் நடக்கும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் பிரபாஸின் தீவிர ரசிகர்கள் குஷியில் துள்ளி குதித்தனர்.
குஷியில் ரசிகர்கள் : ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸும், கீர்த்தி சனோனும் சேர்ந்து நடிக்கத் தொடங்கியதில் இருந்து, இருவரும் காதலிப்பதாகவும், டேட்டிங் செய்ததாகவும் செய்திகள் பரவின. இந்த வதந்தியை கீர்த்தி சனோன் திட்டவட்டமாக மறுத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது பிரபாஸ், கீர்த்தி சனோனை வைத்துக்கொண்டே திருணம் குறித்து பேசி இருப்பதால், அப்போது அந்த காதல் வதந்தி உண்மை இல்லையா என கேட்டு வருகின்றனர்.