கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் கைது.!!
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ரோந்து செல்லும் போது சந்தேகப்படும் வகையில் உள்ளவர்களை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் சாலை மாரியம்மன் கோயில் அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் இன்று மாலை சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது போலீஸாரை பார்த்ததும் இளைஞர் ஒருவர் தலை தெறிக்க ஓடியுள்ளார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஸ்ப்ளென்ட் ரோஷன் ரைக்கா என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்து, அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்..