சிங்கப்பூர்,
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது நாள் போட்டி நேற்று நடைபெற்றது.இதில் ஆண்கள் இரட்டையர் முதலாவது தகுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி ஜப்பானின் அகிரா கோகா-தாய்ச்சி சாய்டோ ஜோடியுடன் மோதினர்.இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 18-21, 21-14, 18-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகிரா கோகா-தாய்ச்சி சாய்டோ இணையிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
இதில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜாலி திரிஷா- காயத்ரி கோபிசந்த் ஜோடி 14-21, 21-18, 19-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் யங் நிகா டிங்- யங் புய் லாம் இணையிடம் போராடி வீழ்ந்தது.