டாஸ்மாக்: அதிர்ச்சி அளித்த கடை எண்(?)… பொதுமக்களே பட்டியலிட்ட கடைகள்! #RemoveThisTasmac

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும், கோயில்கள், பள்ளிக்கூடங்கள், கடைவீதிகள், மருத்துவமனைகள் என பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட முன்னுரிமை வழங்கப்படும், அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். விரைவில் இது தொடர்பான பட்டியல் வெளியாகும் என்றும் சமீபத்தில் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், `உங்கள் ஊர், பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக உள்ள டாஸ்மாக் கடைகளை காரணக்களுடன் குறிப்பிடவும். உங்கள் கருத்துகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்’ என ஜூனியர் விகடன் சார்பில் பொதுமக்களிடம் கேட்கப்பட்டிருந்தது. அதில் மாவட்டம், சட்டமன்றத் தொகுதி, கடை இருக்கும் இடம், கடை எண் முதலிய தகவல்கள் கேட்டிருந்தோம்.

மாநிலம் முழுவதும் இருந்தும் பொதுமக்கள், தங்கள் வசிக்கும் பகுதியில் இடைஞ்சலாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை காரணங்களை குறிப்பிட்டிருந்தார்கள். அதனை நமது விகடன் செய்தியாளர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று உறுதி செய்து பதிவு செய்திருக்கிறார்கள்.

இதில், மாநிலத்தில் பல பகுதிகளில் பள்ளிகள், கோயில்கள், பேருந்து நிலையம்/ நிறுத்தங்களுக்கு மிக அருகில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. மேலும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கடை எண் குறிப்பிடாமல் இருக்கிறது. கடை எண் குறித்து அங்கு பணியில் இருப்பவர்களிடம் கேட்டாலும், சொல்ல முடியாது என அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள்.

மாவட்டம்: மயிலாடுதுறை

கடை எண்: 5646

மக்கள் சொன்ன காரணம்: கடை, பள்ளிகள், கல்லூரிகள் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருப்பதால் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாஸ்மாக் சார்பாக உயர் நீதிமன்றத்தில் 6 மாத காலத்தில் மூடிவிடுவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது, அந்த காலம் முடிவடைந்த பின்பும் கடை மூடாமல் நடைபெற்று வருகிறது.!

மாவட்டம்: சென்னை

கடை எண்: 501

மக்கள் சொன்ன காரணம்: குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிக்கு அருகில் உள்ளது!

மாவட்டம்: திருநெல்வேலி

கடை எண்: 10833

மக்கள் சொன்ன காரணம்: “Thirumal Nagar Sir, This shop is near to the residential area. Ladies are not able to cross after 6 P.M and too many broken glass bottles in this area.”

மாவட்டம்: ஈரோடு கிழக்கு

கடை எண்: 3479

மக்கள் சொன்ன காரணம்: “ஈரோடு கிழக்கு பன்னீர்செல்வம் பார்க்  அருகில் கோகிலா மருத்துவமனை அருகிலே உள்ளது. மேலும் 24 மணி நேரமும் இங்கு கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது.”

மாவட்டம்: சென்னை

கடை எண்: 670

மக்கள் சொன்ன காரணம்: “சைதாப்பேட்டை… கடை எண் 670. ஒரே தெருவில் இரண்டு கடை. அருகில் வலம்புரி விநாயகர் கோவில். மணிமேகலை மழலையர் பள்ளி. 24 மணி‌நேரமும் பாரில் மது விற்பனை!”

மாவட்டம்: தஞ்சாவூர்

கடை எண்: கடையில் கடை எண் வெளிப்படையாக வைக்கவில்லை

மக்கள் சொன்ன காரணம்: தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையில் பாலாஜி நகர் அருகருகே இரண்டு மதுக்கடைகள்.

மாவட்டம்: சென்னை

கடை எண்: 508

மக்கள் சொன்ன காரணம்: “சைதைப்பேட்டை சட்டமன்ற தொகுதி 127/53, கோடம்பாக்கம் சாலை, மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம், Chennai-600033.

ஒரு 30 அடி அகலமுள்ள இந்த தெருவில் மார்க்கெட் இயங்குகிறது. அதனால் எப்போதும் ஆட்கள், வாகனங்கள் நெரிசல் அதிகம். இது தவிர இந்த சாலையில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் 18K, 10A, 88D, 19G cut, 500W, 553W, F70, S18K, S30 போன்ற எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த கடைக்கு குடிக்க வருவோர் அனைவரும் தங்களது வாகனங்களை மணிகணக்கில் சாலையிலேயே கடைகள் மற்றும் வீட்டு வாயில்களின் முன்பு நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் இந்த சாலை முழுவதும் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் ஒருவருக்கொருவர் சண்டையும் ஏற்படுகிறது. ஒரு சிலர் குடித்து விட்டு வீடுகளின் வாயில்படியிலேயே படுத்து கொண்டு தகராறு செய்கின்றனர். மேலும் இந்த மதுக்கடைக்கு வெகு அருகிலேயே மாநகராட்சி மேல்நிலை பள்ளியும், ஒரு பிள்ளையார் கோயிலும் இயங்குகின்றது. எனவே இந்த மதுக்கடை அகற்றுவதற்குரிய சரியான மதுக்கடையாகும்.”

மாவட்டம்: கடலூர்

கடை எண்: 2567

மக்கள் சொன்ன காரணம்: நகரின் மத்தியில் உள்ளதால்…

மாவட்டம்: கன்னியாகுமரி

கடை எண்: 4748

மக்கள் சொன்ன காரணம்: தெங்கம்புதூர். அருகிலேயே அரசு உயர்நிலை பள்ளி உள்ளது

மாவட்டம்: நீலகிரி

கடை எண்: 8218

மக்கள் சொன்ன காரணம்: பயணிகள் நிழற்குடை எதிரிலும் பள்ளி மற்றும் கோயிலுக்கு அருகிலும் அமைந்துள்ள மது கடையால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு!

மாவட்டம்: விருதுநகர்

கடை எண்: 11837

மக்கள் சொன்ன காரணம்: பஸ்ஸ்டாண்ட் பின்புறம், கனரா பேங்க் எதிரிலே.. கடை எண் நினைவில்லை. இக்கடையை சுற்றிலும் 3 பள்ளிகள் அமைந்துள்ளன.

மாவட்டம்: சென்னை

கடை எண்: 8799

மக்கள் சொன்ன காரணம்: “குடியிருப்பு பகுதியில் உள்ளது. கடையின் மூன்று பக்கம் வீடுகள் உள்ளது. குமரன் நகர் பிரதான வழி பொது மக்கள் இடையூறாக உள்ளது. எப்போது சத்தம் கூச்சல் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பீடி சிகரெட் நாற்றம், குழந்தைகளுக்கும் பாதிப்பு”

மாவட்டம்: விழுப்புரம்

கடை எண்: `இல்லை’

மக்கள் சொன்ன காரணம்: திண்டிவனம் – மைலம் சாலை. It is in the National Highways causing Traffic Jam for Bike riders.

மாவட்டம்: சேலம்

கடை எண்: 7226

மக்கள் சொன்ன காரணம்: செவ்வாய்பேட்டை சந்தை அருகில்… கடை எண் 7226 ; இந்த கடை அருகில் ஸ்கூல் ஒன்று உள்ளது மறுபுறம் கோயில் உள்ளது!

மாவட்டம்: கோவை, ஆனந்தகுமார் மில் கம்பனி, சரவணம்பட்டி

கடை எண்: 1567

மக்கள் சொன்ன காரணம்: கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம், ஆனந்தகுமார் மில் பஸ் ஸ்டாப், சிவானந்தபுரம், சரவணம்பட்டி, கோவை

தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஸ்டாப் அருகிலே…50 அடி தூரம்; மிகுந்த மக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலான பகுதி!

தொடர்ச்சியாக பொது மக்களின் பதிவுகள், எங்கள் செய்தியாளர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு இதில் பதிவிட இருக்கிறோம். மேலும் அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நீங்களும் உங்கள் பகுதியில் இருக்கும் கடைகள் குறித்து பதிவிட விடும்பினால், கீழே உள்ள தகவல்களை நிரப்புங்கள்…!

Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.