காபுல்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் சர்-இ-பல் மாகாணம் சயத் மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் நேற்று அண்டை மாவட்டத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பஸ்சில் சென்றனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பஸ்சில் அனைவரும் சயத் மாவட்டத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
மலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 9 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.
டிரைவரின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :