மீஞ்சூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத டாரஸ் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மாத கர்ப்பிணி, கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அஜித் – ஐஸ்பிரியா தம்பதிக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணமான நிலையில், ஐஸ்ப்ரியா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை பட்டமந்திரி பகுதியில் இரும்பு சேகரிக்கும் வேலையை முடித்துவிட்டு இருவரும் டி.வி.எஸ் ஸ்கூட்டரில் மீஞ்சூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது சாம்பல் கழிவுகளை ஏற்றிக் கொண்டு பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியதில், ஐஸ்பிரியா உடல்நசுங்கி பலியானார். விபத்தில் கால் முறிந்த அஜித், தனது கண்முன்னே மனைவி இறந்து கிடப்பதைக் கண்டு செய்வதறியாது கதறி அழுதார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தப்பியோட முயன்ற லாரி டிரைவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கால் முறிந்த அஜித்திற்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.