பொள்ளாச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கற்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பெற்றோர் சிறுமியை கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்பு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் சிறுமியை கர்ப்பமாக இருப்பது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து கேரளாவிற்கு விரைந்த போலீசார் சிறுமியை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமியும், பொள்ளாச்சியை சேர்ந்த 17 வயது சிறுவனும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும் சிறுவன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படைத்தனர்.