பணவீக்க விகிதம் குறைவடையும் வேகத்தை எதிர்பார்த்ததை விட வேகமாக இடம்பெறுவதாகவும், அதற்கிணங்க விரைவில் மக்கள் எதிர்பார்க்கும் வங்கி வட்டி வீதம் குறைதலானது விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்ப்பதாக சமுர்த்தி, உள்ளுர் பொருளாதார, சிறு நிதி, சுயதொழில், வர்த்தக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இன்று (08) பாராளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணபுர முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்: கடந்த மே மாதம் 31ஆம் திகதி மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வட்டி வீதக் குறைவானது கடந்த சில மாதங்களில் வட்டி வீதத்தில் குறைவு மற்றும் அதிகரிப்பானது நேற்று (07) அறிக்கையிடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஸ்திரத்தன்மையினுள் திறைசேரி உண்டியலுக்காக சிறந்த கேள்வி காணப்படுவதாகவும் அமைச்சர் முன் வைத்த 364 காலப் பகுதியில் திறைசேரி உண்டியலுக்காக மும்மடங்கு சிறந்த கேள்வி காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதில் பொருளாதார ஸ்திரத்திரத் தன்மை வெளிப்படுவதாகவும் நிலையான வைப்பு மற்றும் வட்டி வீதம் குறைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.