'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' – தாறுமாறாக நடித்துள்ள தமன்னா
'லஸ்ட் ஸ்டோரிஸ்' என்ற ஆந்தாலஜி படம் 2018ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. 2013ல் வெளிவந்த 'பாம்பே டாக்கீஸ்' என்ற ஆந்தாலஜி படத்தின் பின்தொடர் படமாக அது உருவானது. அதன் இரண்டாம் பாகமான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜுன் 29ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் இரண்டு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அமித் ரவீந்தரநாத் சர்மா, கொன்கொனா சென் சர்மா, பால்கி, சுஜாய் கோஷ் இயக்கியுள்ள இப்படத்தில் அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, கஜோல், குமுத் மிஷ்ரா, மிருணாள் தாக்கூர், நீனா குப்தா, தமன்னா, திலோத்தமா ஷோமே, விஜய் வர்மா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இத்தனை பேர் நடித்திருந்தாலும் இரண்டு நாள் முன் வெளியான டீசரில் அதிக பரபரப்பை எற்படுத்தியவர் தமன்னா மட்டுமே. இதுவரை அவர் காட்டாத கவர்ச்சியை இத்தொடரில் காட்டியுள்ளதாகச் சொல்கிறார்கள். அதற்காக அவர் இதுவரை வாங்காத அதிகபட்ச சம்பளத்தையும் வாங்கியுள்ளதாக பாலிவுட் கிசுகிசுக்கிறது. மேலும், தமன்னாவின் காதலன் என சொல்லப்படும் விஜய் வர்மா உடன் படுக்கையறைக் காட்சிகளிலும் தமன்னா நெருக்கமாக நடித்துள்ளாராம்.
இப்படத்தின் போஸ்டர்களில் ஒன்றான 'த செவன் வொன்டர்ஸ்' என்ற போஸ்டரைப் பகிர்ந்து விஜய் வர்மா, “லஸ்ட் ஸ்டோரிஸ் 2, லவ்லி லேடிஸ்” எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தமன்னா, “எட்டாவது அதிசயத்துடன் கையெழுத்திட என்ன செய்ய வேண்டும், ஒரு நண்பருக்காகக் கேட்கிறேன்,” என கமெண்ட் போட்டுள்ளார் தமன்னா.
இப்படத்தின் டீசரில் சீனியர் நடிகையான நீனா குப்தா, “ஒரு காரை வாங்கும் போது டெஸ்ட் டிரைவ் போவதில்லையா, திருமணத்திற்கு முன்பாக ஏன் டெஸ்ட் டிரைவ் போவதில்லை,” எனக் கேட்கும் வசனம் இது எந்த மாதிரியான படம் என்பதை ரசிகர்களுக்குப் புரிய வைக்கும். வெளியாகும் போது இன்னும் என்னென்ன சர்ச்சைகள் வரப்போகிறதோ ?.