தருமபுரி அருகே வனப்பகுதியில் இளம்பெண் மர்ம மரண வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரியைச் சேர்ந்த 23 வயதுடைய பி.பார்ம் பட்டதாரியான ஹர்ஷா என்பவர் அதியமான்கோட்டை அருகே வனப்பகுதியில் துப்பட்டாவால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்த நிலையில், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் ஹர்ஷாவுக்கும், சிறுவனுக்கும் வயதுக்கு மீறிய நட்பு இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் தான் வேறொருவரைக் காதலிப்பதாக ஹர்ஷா கூறியதால், கோபமடைந்த சிறுவன், அவரை நேற்று வனப்பகுதிக்கு அழைத்து வந்து பின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்தது கண்டுபிடிக்கப்பட்டது.