கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வீதி உலா வந்த சப்பரம் மரக்கிளையில் மோதி கீழே கவிழ்ந்தது.
தெற்கு பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, சப்பரம் வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவின்போது சாலையோரம் இருந்த மாமர கிளையில் சப்பரம் மோதி கீழே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சப்பரத்தை தள்ளிக்கொண்டு சென்ற, நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமார் காயமடைந்ததையடுத்து, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவிழ்ந்த சப்பரத்தை அங்கிருந்தவர்கள் உடனடியாக தூக்கி நிறுத்தியதையடுத்து தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது.