கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘2018’. ஜுட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் உருவான இந்தப்படம் கேரளாவில் நடந்த வெள்ள பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு ரிலீசானது. ரியல் கேரளா ஸ்டோரி என இந்தப்படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சாகா போபன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மலையாளத்தில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையையும் இந்தப்படம் பெற்றுள்ளது. ‘2018’ படம் வெளியான 33 நாட்களில் ரூ.177 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப்படம் ஒடிடியில் வெளியாகியுள்ளதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Leo: விஜய் பிறந்தாளுக்கு ஒன்னு இல்ல டபுள் ட்ரீட்: வெளியான கொல மாஸ் தகவல்.!
இதனை கண்டித்து கேரளா திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இரண்டு நாட்கள் திரைப்பட காட்சிகளை ரத்து செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகும் 99 சதவீத படங்கள் தோல்வியடையும் நிலையில், ஏதோ ஒரு படம் அதிர்ஷ்டவசமாக நன்றாக ஓடுகிறது. அதையும் சீக்கிரமே ஓடிடியில் ரிலீஸ் செய்வதை ஏற்க முடியாது. இதனால் ரூ. 200 கோடி வசூல் செய்ய முடியாமல் போயுள்ளது என திரையரங்கு உரிமையாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
Jailer: ‘ஜெயிலர்’ பட நடிகைக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்: என்னன்னு தெரியுமா..?