சென்னை: கோலிவுட்டின் சாக்லேட் ஹீரோ ரன ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஆர்யா.
உள்ளம் கேட்குமே திரைப்படம் மூலம் அறிமுகமான ஆர்யா, சுமார் 18 ஆண்டுகளாக நடித்து வருகிறார்.
கடந்த வாரம் அவரது நடிப்பில் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், ஒரு படத்திற்காக ஆர்யா வாங்கும் சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அலற வைக்கும் ஆர்யாவின் சம்பளம்:2005ம் ஆண்டு வெளியான உள்ளம் கேட்குமே, அறிந்தும் அறியாமலும் படங்கள் மூலம் அறிமுகமானவர் ஆர்யா. சாக்லேட் ஹீரோ, ரங்கட் பாய் லுக் என வெரைட்டியான நடிகராக பயணிக்கத் தொடங்கிய ஆர்யா இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் ஹீரோவாகவும், சில படங்களில் செகண்ட் ஹீரோ அல்லது கேமியோ ரோலிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் மாடலிங்கில் ஆர்வம் காட்டிய ஆர்யா, அதன்பின்னரே திரையுலகில் அறிமுகமானார். நான் கடவுள், மதராசாப்பட்டிணம், அவன் இவன், ராஜா ராணி, அஜித்துடன் இணைந்து ஆரம்பம், விஜய் சேதுதியுடன் பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, சூர்யாவுடன் காப்பான், சார்பட்டா பரம்பரை என போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கென தனி ரசிகைகள் கூட்டமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இத்னால் பாக்ஸ் ஆபிஸிலும் சொல்லும்படியான வசூலாகவில்லை என சொல்லப்படுகிறது. இதனிடையே ஆர்யாவின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் ஒரு படத்துக்கு 14 கோடி ரூபாய் வரை ச்ம்பளம் கேட்கிறாராம்.
நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், ஹோட்டல் பிஸினஸ் என பலவிதங்களிலும் கல்லா கட்டி வரும் ஆர்ர்யா, 14 கோடி ரூபாய் சம்பளம் கேட்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் ஆர்யாவுக்கு 14 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க வாய்ப்பில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 7 முதல் 10 கோடி வரை மட்டுமே ச்ம்பளம் வாங்கலாம் என சொல்லப்படுகிறது. இவரது மனைவி சாயிஷாவும் நடிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்யா அடுத்து பா ரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் 2ம் பாகத்தில் கமிட் ஆகியுள்ளார். கொரோனா ஊரடங்கின் போது அமேசான் பிரைமில் வெளியான சார்பட்டா பரம்பரை முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது, அதனால், தற்ப்போது உருவாகவுள்ள சார்ப்பட்டா பரம்பரை 2ம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.